
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரமேஷ் பவார் பிசிசிஐயின் ஜூனியர் தேசிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
இந்தியாவின் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேசிய தேர்வுக்குழுவின் தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரமேஷ் பவார் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளதுடன், மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.