
தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நாளை (ஆக.19) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆக.19 முதல் 22-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை அறிக்கை எச்சரிக்கிறது.