
இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாக உள்ளது.