
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்யப்பட்ட சுமார் 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.
சாலவாக்கம் மற்றும் மேல்பெரமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் திறந்தவெளியில் நெல்லைக் குவித்து வைத்துள்ளனர்.
நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் 70 கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் கொள்முதல் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.