
லக்னோவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் மோதி வருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியின் தொடக்க வீராங்கனை குணாலன் கமலினி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கமலினி 59 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததன் மூலம், தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது.