
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கை அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில் இத்தகைய சோதனைகள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும், குதிரை பேரம் குறித்த புகார்களில் FIR கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்தின் வழியில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.