
இந்தியாவின் போட்டித் தேர்வு பயிற்றுவிப்பு சந்தை வரும் 2030-ம் ஆண்டில் ரூ.2.47 லட்சம் கோடியாக உயரும் என ரெட்சீர் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வு தயாரிப்பு பிரிவுகளில் அதிக முதலீடுகள் குவிந்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாணவர்கள் பயிற்றுவிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் முந்தைய வெற்றி விகிதத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.