
ஜேசன் ஸ்டேதம் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருந்த 'மியூடினி' திரைப்படம், அமெரிக்காவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று தவறுதலாக வெளியானது.
இந்தத் தவறு நடந்த சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு படம் தளத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே படம் வெளியானதால் ரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளதோடு, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.