ஐபிஎல் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை 8 கோடி ரூபாய்க்கு வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 28 வயதான கலீல் அகமது, சிஎஸ்கே நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சீசனில் கலீல் அகமது 4.80 கோடி ரூபாய்க்கு விளையாடிய நிலையில், தற்போது 10 கோடி ரூபாய் சம்பளம் அல்லது டிரேடிங் மூலம் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.