
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகிறது.
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் மற்றும் நகைச்சுவை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.