
வெள்ளை மாளிகையின் முன்னாள் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ், மெலானியா டிரம்ப் தனது கணவரின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மெலானியாவுக்கு வெள்ளை மாளிகையில் வசிப்பது பிடிக்கவில்லை என்றும், அது சிதைந்து கிடப்பதாக அவர் விமர்சித்ததாகவும் சாரா மேத்யூஸ் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஒரு வருடம் பணியாற்றியும், தான் மெலானியாவை வெள்ளை மாளிகையில் சந்தித்ததே இல்லை என்றும் சாரா மேத்யூஸ் கூறியுள்ளார்.