
தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது ரேஷன் அரிசியின் தரம் குறித்து திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது.
ரேஷன் அரிசி தரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தத் தான் ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதாகக் கூறி பதிலளித்தார்.
கே.என்.நேருவின் கருத்துக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அவரிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தும் ரேஷன் அரிசி சாப்பிடுவதாகக் கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.