
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவுக்கும், பிரபல நடிகைக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஈகோ மோதல் காரணமாக, மீண்டும் இணைந்து நடிக்க மறுப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பிரம்மாண்ட படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த நடிகை இருந்தால் நடிக்க மாட்டேன் என ஹீரோ திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என ஒரு தரப்பு கூறினாலும், பழைய பகை காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்து வருவதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.