
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தது, முனீபா அலி அதிகபட்சமாக 54 ரன்கள் குவித்தார்.
இலக்கை துரத்திய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.