
நேபாள வெள்ளப் பாதிப்பின் போது, இணையத்தில் இந்தியர்களுக்கு எதிராகப் பதிவிடப்பட்ட இனவெறி கருத்துகள் வெட்கக்கேடானது என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் விமர்சித்துள்ளார்.
வெள்ளத்தில் காணாமல் போன சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 9 பேரின் தோற்றத்தை வைத்து, இணையத்தில் பரப்பப்பட்ட திரிபுவாத கருத்துகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய மோசமான கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறிய அமைச்சர், சமூக வலைதளங்களில் இருந்து அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.