
அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயது டிம் ஆண்ட்ரூஸ், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, டயாலிசிஸ் இன்றி 271 நாட்கள் உயிர் வாழ்ந்து மருத்துவ சாதனை படைத்துள்ளார்.
இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட சிறுநீரகத்தில் 69 மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு, மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு நடந்த மற்றொரு சோதனையில், நோயாளி ஒருவர் பன்றி சிறுநீரகத்துடன் 52 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில், தற்போது இந்த சிகிச்சை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.