
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலைக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் மின் உற்பத்தி நேற்று முன்தினம் காலை நிறுத்தப்பட்டது.
கடல் நீரை வடிகட்டும் வலை அமைப்பையும் தாண்டி ஜெல்லி மீன்கள் உள்ளே புகுந்ததால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு நாள் கழித்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்டவை, இதில் தலா 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.