
1960-ஆம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இன்று திரைத்துறையில் 66 ஆண்டுகளை நிறைவு செய்து 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட அவர், இந்திய சினிமாவில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளார்.
கமல்ஹாசனின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் “67 Years of Kamalism” என்ற தலைப்பில் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.