/polimer-news/media/media_files/2026/11/02/netanyahutrump-2026-11-02-17-15-17.jpg)
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நிறைவடைந்ததும், ஈரானை உடனடியாகத் தாக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப் விரும்புவதாகவும், துணை அதிபர் வேன்ஸ் ஈரானுக்குக் கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரானில் ஓரிரு அணுசக்தி நிலையங்களை மட்டுமே தாக்க வேண்டி உள்ளதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நெதன்யாகு மட்டுமே போரைத் தொடருமாறு வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.