
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பள்ளி முடிந்து திரும்பிய 17, 13, 12 வயதுடைய சகோதரிகள் மற்றும் அவர்களை அழைத்து வந்த 19 வயது கல்லூரி மாணவி என மொத்தம் 4 பேர் பலியாகினர்.
விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.