
சொத்துப் பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளுக்குப் பதிலாக கூகுள் மேப் அல்லது ஜி.பி.எஸ். விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பதிவு செய்யலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள பதிவுத்துறை, கடந்த 2023 செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, புவியியல் ஆயத்தொலைவுகளுடன் அட்சரேகை, தீர்க்கரேகை எண்கொண்ட புகைப்படத்தை ஏ4 தாளில் இணைத்து ஆவணத்தின் ஒரு பகுதியாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
எனினும், நான்கு புற எல்லைகளுக்குப் பதிலாக கூகுள் மேப் அல்லது ஜி.பி.எஸ். விவரங்களை மட்டும் கொண்டு பத்திரப்பதிவு செய்யலாமா என்பது குறித்து பதிவுத்துறை நேரடியான பதில் எதையும் அளிக்கவில்லை.