
தென் கொரியாவில் பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்த 71 வயது விவசாயி ஒருவரின் கண்களில் இருந்து 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
விலங்குகளைத் தாக்கக்கூடிய 'தெலாசியா காலிபேடா' எனப்படும் கீழைநாட்டு கண் புழுக்கள் முதியவரின் கண்களுக்குள் முட்டையிட்டு லார்வாக்களை உருவாக்கும் நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திறந்தவெளியில் வேலை செய்யும்போது விலங்குகளின் கண்ணீர் சுரப்புகளை உண்ணும் ஈக்கள் மூலமாக இந்த ஒட்டுண்ணித் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.