
பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்டு நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 'துரந்தர்' திரைப்படம் ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்ற விமர்சனங்களை நடிகர் மாதவன் மறுத்துள்ளார்.
மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரோ அல்லது பிரதமரோ நல்ல காரியங்களைச் செய்யும்போது அவர்களை ஆதரிப்பது நமது கடமை என்று மாதவன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் மாதவன், 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'ஜிடிஎன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார்.