
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 80 ரன்களும், சாய் சுதர்சன் 40 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் துருவ் ஜூரெல் பொறுப்புடன் விளையாடி 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.