
தென் கொரியாவின் ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனர் குவான் ஹியுக்-பின், விவாகரத்து வழக்கில் தனது மனைவிக்கு சொத்துப்பங்கீடாக ரூ.17,000 கோடிக்கு மேல் வழங்க சியோல் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளை உடனடியாக மாற்றுவதுடன், 65 பில்லியன் வான் ரொக்கப் பணமாகவும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கொன்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை இதுவாகும்.