
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்தில் கிடைமட்ட வடிவிலான (லேண்ட்ஸ்கேப்) நீண்ட நேர வீடியோக்களை வெளியிடும் 'Features' என்ற புதிய வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய அப்டேட் மூலம் யூடியூப் தளத்தில் வருவதைப் போல 90 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களையும் செங்குத்து வடிவம் இன்றி பதிவேற்ற முடியும்.
பாட்காஸ்ட் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்ற நீண்டநேர வீடியோக்களை அகலத்திரை வடிவில் முழுமையாகப் பார்க்க இந்த வசதி பயனர்களுக்கு உதவும்.