பிலிப்பைன்ஸ் நாட்டின் ஃபர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் பயிற்சியின் போது இரு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் விமானங்களில் பயணித்த 4 விமானப்படை பயிற்சி வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறும் நிலையில், இத்தாலியில் இருந்து வாங்கப்பட்ட SF-260 ரக விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.