
சென்னை கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
அமீன் மற்றும் அவரது நண்பர் சென்ற போர்ஷே கார், ரேபிடோ வேகன் கார் மீது மோதியதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
23 வயதான அமீன், 2026-ல் வெளியான பீகி பீகி பாடல் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.