International
சவுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

சவுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சவுதி அரேபியாவுக்கும் ஏமன் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சவுதி எல்லைக்குள் நுழையும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரசு எச்சரித்துள்ளது.

2

சவுதி அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீடியோவோ புகைப்படமோ எடுக்க வேண்டாம் என்றும் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.

3

ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் வெளிநாட்டினர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சவுதியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.