
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நவம்பர் 2 முதல் 8 வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.
டபிள்யூடிஏ 250 புள்ளிகள் கொண்ட இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறும் மூன்று ஆடுகளங்களிலும் முதன்முறையாக மின்னணு 'லைன் காலிங்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.