
எல் நினோ தாக்கம் மற்றும் மேற்காசிய போரால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.80 சதவீதமாகக் குறையும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 7.60 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டு 6.80 சதவீதமாகக் குறையும் என்றும், சில்லரை பணவீக்கம் சராசரியாக 4.90 சதவீதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் சராசரி மதிப்பு 93.98 ரூபாயாக இருக்கும் என்றும், இது 6.40 சதவீத சரிவைக் குறிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.