
பீஜிங்கில் நடைபெற்ற ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், உசைன் போல்ட் 2009-ல் படைத்த 9.58 விநாடி சாதனையை முறியடித்து, ஒரு ரோபோ 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது.
அதே போட்டியில் மற்றொரு ரோபோ உயரம் தாண்டுதலில் 2.88 மீட்டர் உயரத்தைக் கடந்து, 1993-ல் கியூபாவின் சேவியர் படைத்த 2.45 மீட்டர் உலக சாதனையைத் தகர்த்துள்ளது.
பீஜிங்கின் எக்ஸ்-ஹியூமனாய்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோக்கள், ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பிரத்யேக ஒலிம்பிக் போன்ற போட்டியில் பங்கேற்றுள்ள 2,000 ரோபோக்களில் சிறந்து விளங்கியுள்ளன.