சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறை அருகே மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த வளாகத்தில், குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை பன்றிகள் கிளறுவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.