
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள இலங்கை அணி, 2008-க்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியில் சவால்களை எதிர்கொள்கிறது.