
சென்னை தி.நகரில் உள்ள ஸ்பா ஒன்றிற்கு மசாஜ் செய்யச் சென்ற நடிகை வினோதினி, அங்கு கழற்றிக் கொடுத்த தனது தாலி செயினைத் தொலைத்துவிட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
மசாஜ் முடிந்து வீட்டிற்குச் சென்ற பிறகு செயின் இல்லாததை உணர்ந்த அவர், ஸ்பா நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது செயின் காணவில்லை என அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகை வினோதினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு, ஸ்பாவிற்குச் செல்பவர்கள் விலைமதிப்பற்ற பொருட்களை ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.