
அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இடம்பெறும் 50 நிமிட வீடியோவை 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்-கொய்தா அமைப்பு வெளியிட்டுள்ளது.
9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி 'செப்டம்பர் 11 தாக்குதல்களில் கால் நூற்றாண்டு' என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது பழையதா என்பதில் தெளிவு இல்லாத நிலையில், ஹம்சா உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.