
அமெரிக்காவின் மியாமியில் வருகிற டிசம்பரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேசுவதற்கும், உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.