Indian Politics
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை

hindutamil2h
THE BRIEF
1

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

2

சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

3

வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளைக் கொண்டு பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் தடையின்றி இலவச மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.