
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஹலைப் டிரையாங்கில் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து - சூடான் இடையே எல்லைப்பிரச்சினை நிலவிவரும் நிலையில், அப்பகுதியில் உள்ள சுரங்கங்கள் மீது எகிப்து இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த திடீர் வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து எகிப்து - சூடான் எல்லையில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.