
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம் ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாகப் பரவும் தகவல் தவறானது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுவதாகவும், செய்கூலி, சேதாரம், காப்பீடு போன்ற கூடுதல் கட்டணங்கள் மட்டுமே ரூ.0.01 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என தகவல் நம்பகத்தன்மை பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.