
அமெரிக்காவின் உளவு விமானங்கள் மற்றும் டேங்கர் விமானங்களை நடுவானில் அழிக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சீனா ரகசியமாக தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் 2,500 கி.மீ முதல் 8,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் மற்றும் ஹவாய் ராணுவ தளங்களை தாக்கும் வல்லமை கொண்டவை.
ஒலியை விட பல மடங்கு வேகத்தில் திசையை மாற்றிக்கொண்டு ரேடார்களில் சிக்காமல் செல்லும் இந்த ஆயுதங்களால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்புத்துறை அதிர்ச்சியடைந்துள்ளனர்.