
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மக்கள் நலன் சார்ந்து சிந்தித்துச் செயல்படுவதே உண்மையான அரசியல் என்றார்.
மேலும், சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.