
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.
சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும், ராதிகா மற்றும் ரவீனா டண்டன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.