தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த மூன்றாவது ஆசிய ஓப்பன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் குருலால் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.
19 வயதான குருலால் 50 மீட்டர் மற்றும் 25 மீட்டர் ‘ப்ரீஸ்டைல்’ பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மொத்தம் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.
இந்தத் தொடரில் 4x50 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் பிரிவிலும் பதக்கம் வென்ற குருலால், சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.