
மோசமான அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் என விமர்சிக்கப்பட்ட சீன அனிமேஷன் படமான 'நியு லை', சமூக வலைதளங்களில் மீம் கன்டென்ட்டாக மாறியதால் சீனாவில் ரூ.20 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான இப்படம் முதல் பத்து நாட்களில் வெறும் ரூ.1.04 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் மக்கள் திரையரங்குக்கு படையெடுத்ததால் வசூல் அதிகரித்தது.
தாயும் மகனும் இணைந்து ஐந்து ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கிய இப்படம், துல்லியமான ஏஐ காட்சிகளுக்கு மத்தியில் கைகளால் உருவாக்கப்பட்ட அனிமேஷன் அனுபவத்திற்காக சிலரால் பாராட்டப்படுகிறது.