
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்குச் சென்ற படகு பழுதானதால், 15 நாட்களாக உணவு மற்றும் நீரின்றி தத்தளித்த 17 அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயின் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில், உயிருக்குப் போராடிய இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகள் 211 படகுகள் மூலம் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.