
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் மையத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியின் 8வது எடிஷன் தொடங்கியது.
14.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் நடக்கும் இக்கண்காட்சி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகளவில் 1,100க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியின் விளம்பர தூதர்களாக நீரஜ் சோப்ரா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர்.