
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது 6 லட்சம் ஊழியர்களின் லேப்டாப்களில் 'Digital User Experience Monitoring' என்ற புதிய கண்காணிப்பு மென்பொருளை நிறுவியுள்ளது.
இந்த மென்பொருள் ஊழியர்கள் எந்தெந்த செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டது.
ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் உளவு பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டிசிஎஸ் நிர்வாகம், சைபர் பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டிற்காக மட்டுமே மேக்ரோ அளவிலான தரவுகள் கண்காணிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.