
வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளதா என்றும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், SIR ரத்து மற்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை ஆகிய கோரிக்கைகளுடன் அவர் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்.