
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் காசி அணியை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான சர்ச்சில் பிரதர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது.
இந்த வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சர்ச்சில் பிரதர்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது தொடக்க ஆட்டங்களிலேயே வெற்றியைப் பதிவு செய்துள்ளன.